திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா
திருச்செந்துாரில் கந்த சஷ்டி விழா.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் உலக பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா 8ந்தேதி துவங்கியது.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் உலக பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடக்கும் அதன்படி 8ந்தேதி அதிகாலை திருக்கோயில் 1 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.அதனை தொடர்ந்து அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வருப தீபாரதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 5.30மணிக்கு ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் முதல்பிரகாரத்தில் எழுந்தருளி யாகசாலை பூஜை நடந்தது
.அதனை தொடர்ந்து கோயில் நிர்வாகத்திடம் சிவாச்சாரியார்கள் அனுமதி வாங்கும் நிகழ்வும் 12 மணிக்கு தீபாரதனையும் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சுவாமி தங்கரதத்தில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு யாகசாலைபூஜையும் நடைபெறவுள்ளது.பக்தர்கள் கடலில் நீராடி நாழிக்கிணற்றில் நீராடி கோயில் வளாகத்தில் விரதமிருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 13ந்தேதி நடக்கிறது. 13ந்தேதி காலை 6 மணிக்கு யாகபூஜையும்,12 மணிக்க தீப ஆராதனையும்,12.45க்கு ஜெயந்திநாதர் புறப்பட்டு சண்முக விலாசத்தில் தீப ஆராதனையும் அதனை தொடர்ந்து 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வழிபாடும் நடக்கும்.அதனை தொடர்ந்து மாலை 4.30மணிக்கு ஜெயந்தி நாதர் சூரம்சம்ஹாரத்திற்கு கடற்கரையில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கு தீப ஆராதனை நடைபெறும்.
தொடர்ந்து 14ந்தேதி புதனகிழமை காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசுக்கு புறப்படும் காட்சியும்,மாலையில் அம்பாளுக்கு சுவாமி தோள்மாலை மாற்றுதல் வழிபாடும் நடக்கும் தொடர்ந்து இரவு 11 மணிக்கு தெய்வானை அம்பாளுக்கும் சுவாமிக்கும் மேலக்கோபுர முன் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.
15ந்தேதி வியாழக்கிழமை இரவில் குமரவிடங்கபெருமான் தங்கமயில் வாகனத்தில் பட்டினபிரவேசம் நிகழ்வும்,19ந்தேதி 12ம்நாள் விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டும்,சுவாமியும் அம்பாளும் திருவீதி உலா வந்து திருககோயில் சேரும் வழிபாடும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Thiruchendur murugan |
Comments
Post a Comment