தூத்துகுடி முறப்பநாட்டில் புஷ்கர விழா
தாமிரபரணி மகா புஷ்கர விழா தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் மகா புஷ்கர யாகம் அக் 11ம் தேதி தொடங்கி ம வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தில் மிகவும் பழமையான நதியான தாமிரபரணியில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தற்போது தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு குரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் தீர்த்தக் கட்டத்தில் 12 நாட்கள் நடைபெறும் இந்த மகா புஷ்கரம் விழாவில் தினமும் முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான காசியில் கங்கா ஆரத்தி நடைபெறுவது போல தாமிரபரணியிலும் தற்போது தினமும் விழாவை முன்னிட்டு மாலையில் ஆரத்தி நடைபெற்று வருகிறது.
காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்யலாம். 12 நாட்களும் சிறப்பு பூஜையும் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் கலசம் வைத்து பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. விழாவில் குன்றக்குடி அடிகளார் மற்றும் சீர்வளர்சீர் செங்கோல் ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கினர். மேலும் 20 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறவிருக்கும் அதிருத்ர வேள்விகளை சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் அவர்கள் தலைமையில் வழிகாட்டுதல்படி திருப்புனவாசல் சுப்பையா குருக்கள் உட்பட 230 வேத விற்பன்னர்கள் நடத்தவிருக்கிறார்கள்.
மேலும் தாமிரபரணி நதிக்கரையில் தாமிரபரணீஸ்வரலிங்கம் பிரதிஷ்டை செய்து அந்த லிங்கத்திற்கு வழிபாடு செய்ய வந்தவர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் உற்பத்தியாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 49 முக்கிய தீர்த்தகட்டங்களும் 149 படித்துறைகளும் அமைந்துள்ள மேலும்149 படித்துறைகளிலும் நீராடலாம்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி திருப்புடைமருதூர் சேரன் மகாதேவி கோடகநல்லூர் கோபாலசமுத்திரம் குறுக்குத்துறை மணி மூர்த்தீஸ்வரர் சீவலப்பேரி ஆகிய ஊர்களிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி தென்திருப்பேரை சேர்ந்த பூ மங்கலம் ஆகிய ஊர்களிலும் மேலும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை பக்தர்கள் நீராடலாம்
Comments
Post a Comment