அறந்தாங்கி காசிவிஸ்வநாதர்கோயிலில் குருபெயர்ச்சி விழா

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அகரம் காசிவிஸ்வநாதர்கோயிலில் குருபெயர்ச்சி விழா திரளாக நடந்தது.


அறந்தாங்கியில் அக்ரஹாரம் பகுதியில் பழமையான பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர்கோயில் உள்ளது.இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா எப்போதும் சிறப்பான வழிபாடுடன் நடப்பது வழக்கம்.

அதன்படி நடந்த விழாவில் காசிவிஸ்வநாதர்,விசாலாட்சி,உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு ஹோமம் செய்து அபிஷேகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து குருபெயர்ச்சி நேரத்தில் குருபகவானுக்கு சிறப்பான மலர் அலங்காரம் செய்து குருபெயர்ச்சி லட்சார்ச்சனையுடன் கூடிய  தீப ஆராதனை நடந்தது.

இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த குருபெயர்ச்சியில் மேசம் மிதுனம் சிம்மம் கன்னி விருச்சிகம் தனுசு கும்பம் ஆகிய ராசிகளை சேர்ந்தவர்கள் பரிகார அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.










Comments

Popular posts from this blog

அறந்தாங்கி அருகே அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா