ஆவுடையார்கோயில் அருகே குருங்களூரி்ல் கைலாச நாதர் கோயிலில் குருபெயர்ச்சி விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே குருங்களூரில் குருபெயர்ச்சி விழா நடந்தது.
ஆவுடையார்கோயில் அருகே குருங்களூர் கிராமத்தில் பழமையான கைலாசநாதர்கோயில் உள்ளது.இக்கோயில் அகஸ்தியமுனிவரால் பிரதிஷ்டைசெய்யப்பட்டு மாவேலி மன்னரால் நிர்வகிக்கப்பட்ட திருமிழலை நாட்டின் பிரதான கோயிலாகும்.
இக்கோயிலில் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபெயர்ச்சி அடைவதை முன்னிட்டு கோயிலில் உள்ள கைலாசநாதர் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு குருபெயர்ச்சி வேளையில் தட்சிணாமூர்த்தி அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்து தீப ஆராதனை நடந்தது.
முன்னதாக மாலையில் சங்கல்பம் கலச ஆவாஹனம் ஜபம் மகாகணபதிஹோமம் நவக்கிரகஹோமம் மஹாமிருத்யஞ்ஜய ஹோமம் ஸ்ரீ துர்கா ஹோமம் ஸ்ரீ சுப்ரமணிய காயத்திரி ஹோமம் சுயம்வரா பார்வதி ஹோமம் நட்சத்திரஹோமம் பூர்ணாஹீதி நடந்தது.விழாவின் நிறைவில் குருபெயர்ச்சி குறித்து ஜோதிட ரத்னா பாலஸ்ரீனிவாஸன் குருபெயர்ச்சி குறித்து அனைத்து ராசியினருக்கும் உரிய நற்பலன்களை தெரிவித்தார்.
ஏற்பாடுகளை குருங்களூர்,கோவிலான்வயல்,சிறுக்கத்தான்குடி,வலையன்வயல் கிராமத்தார்கள் செய்தனர்.
குருபெயர்ச்சி சர்வசாதக பணிகளை கோயில் ஸ்தல அர்ச்சகர் தியாகராசகுருக்கள் முன்னிலையில் கோட்டையூர் பாலுசிவாச்சாரியார்,ஜெயங்கொண்டம் சண்முக சிவாசாரியார் ஆகியோர் செய்தனர்.
விழாவை முன்னிட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.மேஷம் மிதுனம் சிம்மம் கன்னி விருச்சிகம் தனுசு கும்பம் ராசிக்காரர்கள் சன்னதியில் பரிகார அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
Comments
Post a Comment