ஆவுடையார்கோயில் அருகே பொன்பேத்தி சுந்தர்ராஜபெருமாள் கோயிலில் வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே உள்ள பொன்பேத்தி சுந்தர்ராஜபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆவுடையார்கோயில் அருகே பொன்பேத்தி கிராமத்தில் மிகப்பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தர்ராஜபெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி நடந்த வழிபாட்டில் ஸ்ரீதேவி பூதேவிசமேத சுந்தர்ராஜபெருமாள்,சொர்ணலட்சுமி என்கிற அலமேல்மங்கை தாயார்,கருடாழ்வார்,ஆஞ்சநேயர்,வரதராஜபெருமாள்,லட்சுமி நாராயணபெருமாள்,ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம்செய்து தீப ஆராதனை நடந்தது.
இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.அபிஷேக அர்ச்சனைகளை பொன்பேத்தி மணிகண்டன் அய்யங்கார் செய்தார்.
Comments
Post a Comment