அழியா நிலை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது அறந்தாங்கி அருகே அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் அழியாநிலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது ஆராதனைக்குப் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மாலையில் ஆஞ்சநேயர்க்கு வெண்ணைகாப்பு சாற்றி தீப ஆராதனை நடந்தது இந்த வழிபாட்டில் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் திருச்சி தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Comments
Post a Comment