மீமிசலுக்கு வந்த தாமிரபரணி புஷ்கர ரதம் புஷ்கர விழா உற்சாக வரவேற்பு

அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே மீமிசலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த தாமிரபரணி புஷ்கர சரஸ்வதி தீர்த்த ரதத்தை விஷ்வ ஹிந்து பரிசத் நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

தாமிரபரணி மகா புஷ்கர விழிப்புணர்வு சரஸ்வதி தீர்த்த ரத விழிப்புணர்வு யாத்திரை வரவேற்பு விழாவிற்கு மாநில இணை செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.மண்டல செயலாளர் ராமன்,மாவட்ட செயலாளர் அரங்குளவன்,மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கரசேவா மாணிக்கம்,புதுக்கோட்டை மாவட்ட நகர செயலாளர் செல்லத்துரை,ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் கணேசன்,சுப்ரமணியன்,சேவாபாரதி மாவட்ட பொறுப்பாளர் முத்துராஜன்,தர்மரட்சன சமீதி மாவட்டபொறுப்பாளர் ராமநாதன்,ஆகியோர் கலந்துகொண்டனர்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது கும்பமேளா விழா.ஆனால் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது தாமிரபரணி புஷ்கரம் விழா.வரும் 11ந்தேதி அகிலபாரத துறவிகள் மாநாடும்,20ந்தேதி கிராமக்கோயில் பூஜாரிகள் மாநாடும்,21ந்தேதி மகளிர் மாநாடு மற்றும் கலசபூஜையும் நடைபெறவுள்ளது.

12 ராசிகளுக்கும் 12 நதி தீரத்தங்கள் உள்ளது.இந்த 12 தீர்த்தங்களை சேகரித்து தாமிரபரணி தீர்த்தகட்டங்களில் கரைத்து புனித நீராடல் விழா நடக்கும்.அதன் படி மிதுன ராசிக்குரிய சரஸ்வதி தீர்த்தம் சேகரிக்கும் பணியில் ராமேஸ்வரத்தில் சத்தியமூர்த்தி தலைமையில்  ரதம் புறப்பட்டு முக்கிய நகரங்களை கடந்து பாபநாசம் செல்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு தீர்த்தத்தினை திருவுடையாபட்டியிலும் அக்னி ஆறு  தீர்த்தத்தினை பெருங்களுரிலும் சேகரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்திற்கு ரதம்சென்றது.

ராமநாதபுரத்தில் இருந்து வந்த ரதத்தை மாவட்டசெயலாளர் காளிதாஸ் ஒப்படைக்க மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன் பெற்றுகொண்டார்.புதுக்கோட்டையில் இருந்து சென்ற ரதத்தை மாவட்ட செயலாளர் அரங்குளவன் ஒப்படைக்க மாவட்டசெயலாளர் பெரிய கருப்பன்பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் ஒன்றிய மதமாற்ற தடுப்புஅமைப்பாளர் ராமராஜன்,ஆவுடையார்கோயில்ஒன்றிய தலைவர் காளிதாஸ்,மணமேல்குடி ஒன்றிய செயலாளர் ராஜேஸ்கண்ணன்,ஆவுடையார்கோயில் ஒன்றிய துணை தலைவர் சின்னதம்பி,மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா,ஆவுடையார்கோயில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காளிதாஸ்,ராஜ்குமார்,சரவணன்,ஒன்றியசெயலாளர் ராஜேஸ்,ஒன்றிய பொருளாளர் நாகராஜன்,மீமிசல் நகர அமைப்பாளர் மாதவன் உட்பட புதுக்கோட்டை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிசத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி ஆசிரியரின் கூடுதல் தகவல்


மகா புஷ்கரம் குருபகவான் எந்தராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த ராசிக்குரிய நதி தாமிரபரணியாகும். இந்த நதி பொதிகை மலையில் உற்பத்தியாகி வருகிறது.வரும் 11ந்தேதி முதல் 21ந்தேதி வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து துாத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை உள்ள 149 படித்துறைகளில் தாமிரபரணியில் நீராட நற்பலன் கிடைக்கும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி திருப்புடைமருதுார் சேரன்மகாதேவி கோடகநல்லுார் கோபாலசமுத்திரம் கருப்பூந்துறை குறுக்குத்துறை மணிமூர்த்தீஸ்வரம் செப்பரை சீவலப்பேரி ஆகிய ஊர்களிலும்

துாத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்திருநகரி தென்திருப்பேரை ஆத்துார்,ஏரல் சேர்ந்த பூமங்கலம் ஆகிய ஊர்களிலும் மேலும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் முதல் துாத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் வரை 149 படித்துறைகளில் நீராடலாம்.


(செய்தி குறித்து படித்ததுடன் தாங்கள் கருத்துக்களை எங்களை ஊக்கப்படுத்த  தாங்கள் செல் நம்பருடன் போஸ்ட் கமெண்ட் பகுதியில் பதிவிடவும்)

Comments

Popular posts from this blog

அறந்தாங்கி அருகே அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா