Posts

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா

Image
திருச்செந்துாரில் கந்த சஷ்டி விழா. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் உலக பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா 8ந்தேதி துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் உலக பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடக்கும் அதன்படி 8ந்தேதி அதிகாலை திருக்கோயில் 1 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.அதனை தொடர்ந்து  அதிகாலை  1.30 மணிக்கு விஸ்வருப தீபாரதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 5.30மணிக்கு ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் முதல்பிரகாரத்தில் எழுந்தருளி யாகசாலை பூஜை நடந்தது .அதனை தொடர்ந்து கோயில் நிர்வாகத்திடம் சிவாச்சாரியார்கள் அனுமதி வாங்கும் நிகழ்வும் 12 மணிக்கு தீபாரதனையும் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சுவாமி தங்கரதத்தில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு யாகசாலைபூஜையும் நடைபெறவுள்ளது.பக்தர்கள் கடலில் நீராடி நாழிக்கிணற்றில் நீராடி கோயில் வளாகத்தில் விரதமிருந்தனர்.  விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 13ந்தேதி நடக்கிறது. 13ந்தேதி க...

தூத்துகுடி முறப்பநாட்டில் புஷ்கர விழா

Image
தாமிரபரணி மகா புஷ்கர விழா  தமிழ்நாட்டில்  தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு   தாமிரபரணி நதிக்கரையில் மகா புஷ்கர யாகம்  அக்  11ம் தேதி  தொடங்கி ம வரும்   24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தில் மிகவும் பழமையான நதியான தாமிரபரணியில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்போது தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு   குரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் தீர்த்தக் கட்டத்தில்  12 நாட்கள் நடைபெறும் இந்த மகா புஷ்கரம் விழாவில் தினமும் முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான காசியில் கங்கா ஆரத்தி  நடைபெறுவது  போல தாமிரபரணியிலும் தற்போது தினமும் விழாவை முன்னிட்டு  மாலையில்  ஆரத்தி  நடைபெற்று வருகிறது. காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்யலாம்.  12 நாட்களும் சிறப்பு பூஜையும் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது 12 ஜோதிர்லிங்கங்களுக்கும்   கலசம் வைத்து  பிள்ள...

ஆவுடையார் கோயிலில் தூண்களில் நவக்கிரகம்

Image
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி   அருகே  ஆவுடையார் கோயிலில் உள்ள ஆத்மநாத சுவாமி கோயிலில் நவக்கிரகங்களை தனியாக சிலை வடிவில் தரிசிக்காமல் கோயில் வளாகத்தில் உள்ள தூண்களில் நவக்கிரகங்களை தரிசிக்கும் சிறப்பு பெற்ற கோயிலாக உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்   நகரில்  மதுரை பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆத்மநாத சுவாமி கோயில் உள்ளது இக்கோயில் மற்ற சிவன் கோயில்களை விட மாறுபட்டு காணப்படும் இங்கு நடைபெறும் பூஜைகளும் வழிபாடுகளும் பிற கோயிலை  விட மாறுபட்டு காணப்படும் சிறப்பான நிலையில்  உள்ள  இந்த   சிவன் கோவிலில் நவக்கிரகங்களை தூண்களிலேயே நாம் தரிசனம் செய்யலாம் மற்ற  திருக்கோயில்களில் தனித்தனியாக இருக்கும் ஆனால் இங்கு   தூண்களில் திருக்கடையூர் காலசம்ஹாரமூர்த்தி திருவண்ணாமலை  திருப்பாத மூர்த்தி திருக்காளத்தி சந்திரன் மங்கள விநாயகர் சூரியன் உஷா தேவி பிரத்தி உஷா தேவி சுக்கிரன் செவ்வாய் குரு ராகு கேது சனி பகவான் ஆகிய  நவ  கிரகங்களை   தரிசனம் செய்யலாம் இ...

அறந்தாங்கி அருகே பரமந்துார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் வழிபாடு

Image
அறந்தாங்கி அருகே பரமந்துார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடநதது.அறந்தாங்கி அருகே அறந்தாங்கி ஆவுடையார்கோயில் சாலையில் உள்ள பரமந்துாரில் உள்ள மிக பழமையான ஆதிகேசவபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

அறந்தாங்கி அருகே அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

Image
அறந்தா்ங்கி  அருகே அழியாநிலைஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசியை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அறந்தாங்கி அருகே அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இக்கோயிலில் நடைபெற்றவழிபாட்டை முன்னிடடு விநாயகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்த நிலையில் விஸ்வருப ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது இதில் ராமநாதபுரம்  புதுக்கோட்டை சிவகங்கை திருச்சி தஞ்சாவூர் உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

அறந்தாங்கி பெருமாள்பட்டியில் புரட்டாசி வழிபாட்டில் சீனிவாசபெருமாள்

Image
அறந்தாங்கி அறந்தாங்கி அருகே அறந்தாங்கி காரைக்குடி சாலையில் உள்ள பெருமாள்பட்டியில் புரட்டாசி வழிபாட்டை முன்னிட்டு பெருமாள் பட்டியில் உள்ள சீனிவாசபெருமாளுக்கு சிறப்பு ஹோமம் செய்து அதனைதொடர்ந்துசிறப்பு அபிஷேகம்செய்து தீப ஆராதனை நடந்தது இந்த வழிபாட்டில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை பூவை மாநகரத்தார்கள் சார்பில விழா நடந்தது.

மீமிசலுக்கு வந்த தாமிரபரணி புஷ்கர ரதம் புஷ்கர விழா உற்சாக வரவேற்பு

Image
அறந்தாங்கி அறந்தாங்கி அருகே மீமிசலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த தாமிரபரணி புஷ்கர சரஸ்வதி தீர்த்த ரதத்தை விஷ்வ ஹிந்து பரிசத் நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். தாமிரபரணி மகா புஷ்கர விழிப்புணர்வு சரஸ்வதி தீர்த்த ரத விழிப்புணர்வு யாத்திரை வரவேற்பு விழாவிற்கு மாநில இணை செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.மண்டல செயலாளர் ராமன்,மாவட்ட செயலாளர் அரங்குளவன்,மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கரசேவா மாணிக்கம்,புதுக்கோட்டை மாவட்ட நகர செயலாளர் செல்லத்துரை,ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் கணேசன்,சுப்ரமணியன்,சேவாபாரதி மாவட்ட பொறுப்பாளர் முத்துராஜன்,தர்மரட்சன சமீதி மாவட்டபொறுப்பாளர் ராமநாதன்,ஆகியோர் கலந்துகொண்டனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது கும்பமேளா விழா.ஆனால் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது தாமிரபரணி புஷ்கரம் விழா.வரும் 11ந்தேதி அகிலபாரத துறவிகள் மாநாடும்,20ந்தேதி கிராமக்கோயில் பூஜாரிகள் மாநாடும்,21ந்தேதி மகளிர் மாநாடு மற்றும் கலசபூஜையும் நடைபெறவுள்ளது. 12 ராசிகளுக்கும் 12 நதி தீரத்தங்கள் உள்ளது.இந்த 12 தீர்த்தங...