தூத்துகுடி முறப்பநாட்டில் புஷ்கர விழா
தாமிரபரணி மகா புஷ்கர விழா தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் மகா புஷ்கர யாகம் அக் 11ம் தேதி தொடங்கி ம வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தில் மிகவும் பழமையான நதியான தாமிரபரணியில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்போது தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு குரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் தீர்த்தக் கட்டத்தில் 12 நாட்கள் நடைபெறும் இந்த மகா புஷ்கரம் விழாவில் தினமும் முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான காசியில் கங்கா ஆரத்தி நடைபெறுவது போல தாமிரபரணியிலும் தற்போது தினமும் விழாவை முன்னிட்டு மாலையில் ஆரத்தி நடைபெற்று வருகிறது. காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்யலாம். 12 நாட்களும் சிறப்பு பூஜையும் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் கலசம் வைத்து பிள்ள...